ஓய்வில் இருந்து விடுபட்டு மீண்டும் கிரிக்கெட் ஆட முடிவு செய்துள்ள அதிரடி மன்னன் யுவராஜ் சிங்! ரசிகர்கள் மகிழ்ச்சி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஓய்வில் இருந்து விடுபட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடிவெடுத்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் 38 வயதான யுவராஜ்சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வடிவிலான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வை கைவிட்டு பஞ்சாப் அணிக்காக முதல்தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்க செயலாளர் புனீத் பாலி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நீண்ட யோசனைக்கு பிறகு பஞ்சாப் அணிக்காக குறைந்தது 20 ஓவர் போட்டிகளில் விளையாட அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு மறுபடியும் விளையாடுவதற்கு அனுமதிகோரி இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அனுமதி கிடைத்தால் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் ஆடுவேன் என்று யுவராஜ்சிங் குறிப்பிட்டார்.

யுவராஜ் மீண்டும் விளையாட முடிவு செய்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்