சென்னை அணியில் ரெய்னாவின் இடத்திற்கு இந்த வீரர் தகுதியானவர்! வெளிப்படையாக கூறிய ஷேன் வாட்சன்

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணியின் நட்சத்திர வீரர் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவர் இடத்தில் விளையாட சரியான வீரர் யார் என்பது குறித்து அந்தணி வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

டோனி தலைமையிலான சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது.

அங்கு டோனி மற்றும் அணியின் நிர்வாகத்தினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா இந்தாண்டிற்கான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் இடத்தில் யாரை சென்னை அணி இறக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், அந்தணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன், சென்னை அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமான ஒரு விடயம்தான்.

ஏனெனில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மென் நிச்சயம் ஒவ்வொரு அணிக்கும் தேவை.

அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக சென்னை அணியில் முரளி விஜய் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் முரளி விஜய் சுழற்பந்து வீச்சுக்கும் சரி, வேகப்பந்து வீச்சிற்கும் சரி சிறப்பாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் நான் அவரையே ரெய்னாவின் இடத்திற்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்