இன்று இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

இப்போட்டியை ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது .

இப்போட்டியில் இன்று இங்கிலாந்து வீரரான ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் களம் இறங்கவுள்ளனர்.

அதுமட்டுமின்றி காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அதிரடி வீரர் ஜாசன் ராயும் விளையாடவுள்ளதால் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை அதிரடியாக இருக்கும்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் விளையாடுவதனால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்றான சூப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்