சென்னை அணியில் ரெய்னா, ஹர்பஜனுக்கு மாற்று யார்? சிஎஸ்கே சிஇஒ முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் 2020 தொடரிலிருந்து ஏற்கனவே சிஎஸ்கே வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகியதால் அவர்களுக்கு மாற்று குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் 2020 தொடரின் தொடக்க போட்டியை மும்பை இந்தியன்ஸுடன் விளையாடவுள்ளது.

ஏற்கனவே சிஎஸ்கே வீரர்கள் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக 2020 தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

அப்போதிருந்து, ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோருக்கு மாற்றாக அணி நிர்வாகம் எந்த வீரரின் பெயரை அறிவிக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக, சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியதாவது, இந்த நேரத்தில் நாங்கள் மாற்று வீரர்கள் குறித்து ஆலோசிக்கவில்லை என்று கூறினார்.

முன்னதாக, ரெய்னாவுக்கு மாற்றாக இங்கிலாந்தின் டி-20 நட்சத்திரம் டேவிட் மாலனை ஒப்பந்தம் செய்ய சிஎஸ்கே முயற்சி மேற்கொள்ளவில்லை.

ஏனென்றால் சென்னை அணியில் வெளிநாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு ஏற்கனவே நிரம்பியுள்ளது. எனவே அணியில் இன்னொரு வெளிநாட்டவரை நாங்கள் எவ்வாறு சேர்க்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை என காசி விஸ்வநாதன் தெளிவுப்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்