டோனி அடித்த சிக்ஸரால் காணமல் போன பந்து! வியந்து போன விஜய்: CSK வெளியிட்ட வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது டோனி அடித்த அபார சிக்ஸரின் வீடியோவை சென்னை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டியிலே சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

இதற்காக இரண்டு அணிகளுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் டோனி அடிக்கும் அபாரமான சிக்ஸர் ஒன்று பதிவாகியுள்ளது.

அதில் சுழற்பந்து வீச்சாளர் எதிராக பேட்டிங் செய்யும் டோனி அந்த பந்தை தூக்கி விளாசுகிறார்.

சிக்சருக்கு சென்ற அந்த பந்து மைதானத்தின் எல்லைகளை தாண்டி மரங்களுக்கு நடுவில் சென்றுவிடுகிறது. பந்து எல்லைக் கோட்டில் தாண்டியதும் வீடியோ எடுக்கும் அந்த நபர் பந்து தொலைந்து விட்டது, வேறொரு பந்து என்பது போல் சொல்லுகிறார்.

மேலும் அதே போன்று முரளி விஜய்யும் அந்த ஷாட்டை வியந்து பார்க்கிறார் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்