இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய அணி - ஹைலைட்ஸ்

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதில் ஆஸ்திரேலிய அணி19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தேற்கடித்துள்ளது

முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. மிட்செல் மார்ஷ் 73, மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுத்தார்கள்.

பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி பில்லிங்ஸ் 118 ரன்களும் பேர்ஸ்டோவ் 84 ரன்களும் எடுத்தார்கள். ஸாம்பா 4 விக்கெட்டுகளும் ஹேஸில்வுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் கொடுத்து.

அந்தவகையில் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹேஸில்வுட் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்