ஐபிஎல் 2020... இந்த முறை அந்த அணி தான் கிண்ணத்தை வெல்லும்: கெவின் பீட்டர்சன் கணிப்பு

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

13வது ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள நிலையில் கிண்ணத்தை வெல்லும் அணி தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கணித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றவுள்ள பீட்டர்சன், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவது மன நிறைவாக உள்ளது என தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது உற்சாகம் தருவதாக குறிப்பிட்ட அவர், இந்த முறை டெல்லி கேபிடல்ஸ் அணி கிண்ணத்தை வெல்லும் என நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

2012-14 வரை டெல்லி அணிக்காக பீட்டர்சன் விளையாடியுள்ளார். ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியை ஷ்ரேயஸ் ஐய்யர் அணித் தலைவராக வழி நடத்தவுள்ளார்.

வரும் 20ஆம் திகதி பஞ்சாப் அணியுடன் தனது முதல் போட்டியை டெல்லி அணி தொடங்கவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்