ஐபிஎல் 2020... மிரட்ட காத்திருக்கும் மும்பை அணி வீரர்! பயிற்சியில் ஸ்டம்பை இரண்டாக உடைத்த வீடியோ காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடவுள்ள நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்ட் பயிற்சியின் போது மிடில் ஸ்டம்பை உடைத்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. இதற்காக எட்டு அணியை சேர்ந்த வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மும்பை அணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தனது பந்து வீச்சின் மூலம் ஒரு ஸ்டம்பை இரண்டு துண்டுகளாக வேகப்பந்து வீச்சாளர் டிரண்ட் போல்ட் உடைத்தெறிந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மணிக்கு 140 கி.மீ மேல் வீசக்கூடிய டிரென்ட் போல்ட் உலக அளவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார்,

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை அணி, சென்னை அணியுடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்