சென்னைவுடன் மோதும் போது எப்படி இருக்கும்? மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா கூறிய பதில்

Report Print Basu in கிரிக்கெட்
149Shares

ஐபிஎல் 2020 தொடரின் தொடக்க ஆட்டத்தில் அதவாது செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்ள உள்ளது.

சென்னை-மும்பை மோதும் போட்டி ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறது, பெரும்பாலும் ஐபிஎல் தெடாரின் ‘El Clasico என்று அழைக்கப்படுகிறது’.

இந்த இரு தரப்பினரும் கடைசியாக ஒருவரை ஒருவர் எதிர்கொண்டது ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் தான், அதில் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

இம்முறை இரு அணிகளிலும் முக்கிய மூத்த வீரர்கள் விளையாடவில்லை. சென்னை அணியில் ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா, மும்மையில் லசித் மலிங்கா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2020 தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், சிஎஸ்கே-வுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் வேடிக்கையாக இருக்கும், இந்த மோதலை நாங்கள் ரசிப்போம் என மும்பை அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆனால் விளையாடும்போது சென்னை அணி எங்களுக்கு மற்றொரு எதிரணியை போல தான், அப்படித்தான் நாங்கள் முன்னோக்கிச் செல்ல விரும்புகிறோம் என்று மும்பை இந்தியன்ஸ் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோவில் ரோகித் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்