சுரேஷ் ரெய்னா இல்லாத நிலையில் தமிழக வீரர் முரளி விஜய்க்கு சிஎஸ்கே அணியில் அதிக போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால், சிஎஸ்கேவின் உத்தேச அணி பற்றிய விவாதங்களில் முரளி விஜய்க்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே கூறப்படுகிறது.
கடந்த இரண்டு சீசன்களில் அதிக போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறாத முரளி விஜய்க்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும்.
அவர் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் அதிக போட்டிகளில் இடம் பெறுவார் என கூறப்பட்டது.
ஆனால், ஷேன் வாட்சனுடன் துவக்க வீரராக, பாப் டுபிளெசிஸ் களமிறங்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.
மேலும், சுரேஷ் ரெய்னாவின் மூன்றாம் வரிசையில் அம்பதி ராயுடு களமிறங்குவார். அவர் கடந்த சீசனில் அதிக போட்டிகளில் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இடம் பெற்றவர் என்பதே அதற்கு முக்கிய காரணம். நான்காம் வரிசையில் ஆடிய அவர் தற்போது மூன்றாம் வரிசையில் ஆடுவார்.
மட்டுமல்லாது, டோனி பந்துவீச்சாளர்களை தவிர கடந்த சீசனில் அதிக போட்டிகளில் ஆடிய அதே வீரர்களுக்கே வாய்ப்பு வழங்குவார் என கூறப்படுகிறது.
இதனால் தமிழக வீரர் முரளி விஜய்க்கு இந்த தொடரில் அதிக வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.