ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற டோனி, பீல்டிங் செய்வதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இத்தனை நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தது, இன்றைய நாளுக்காகத் தான், ஏனெனில் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல், தொடர் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் போட்டியாக இன்று டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகித் தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற டோனி பந்து வீச்சை தெரிவு செய்வதாக கூறினார். அப்போது அவரிடம் கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அடைந்த தோல்விக்கு, பழிவாங்களாக இருக்குமா என்று கேட்ட போதும், நிச்சயமாக மும்பை அணியை பழிவாங்கும் எண்ணம் இல்லை.
.@ChennaiIPL Captain MS Dhoni wins the toss and elects to bowl first in the season opener of #Dream11IPL.#MIvCSK pic.twitter.com/OAuLkAU7qb
— IndianPremierLeague (@IPL) September 19, 2020
அந்த போட்டியின் போது நாம் என்ன தவறு செய்தோமோ அதை திறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், இரவில் பனிப்பொழிவு இருக்கும். நல்ல நிலையில் இருக்கும்போது விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும். முதல் ஆறு நாள் தனிமைப்படுத்தல் மிகவும் கடினமாக இருந்தது.
அனைவரும் அந்த நேரத்தை நன்றாக பயன்படுத்தினோம். யாரும் அதிருப்தி அடையவில்லை. பயிற்சிகள் மிகவும் நன்றாக இருந்தது. 14 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்தது நன்றாக இருந்ததாக தெரிவித்தார்.