ஒருவிதமான பயம்! முதல் போட்டியில் CSK-விடம் உதை வாங்கிய மும்பை அணி.. தோல்விக்கு பின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா

Report Print Raju Raju in கிரிக்கெட்
332Shares

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியிடம் மும்பை தோற்ற நிலையில் தோல்விக்கு பின்னர் மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டோனி தலைமை சிஎஸ்கே அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

பின்னர் பேசிய ரோகித் சர்மா, டுபிளெசிஸ், ராயுடு போல் செட்டில் ஆன பிறகு பேட்ஸ்மென் மேலே கொண்டு சென்றிருக்க வேண்டும், நாங்கள் இதைச் செய்யத் தவறினோம்.

சிஎஸ்கே பவுலர்களுக்குப் பாராட்டுகள், எங்களை எப்போதும் ஒருவிதமான பயத்தில் வைத்திருந்தனர். நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். கற்றுக்கொள்ள வேண்டும்.

மைதானத்தில் எங்களை ஊக்குவிக்க ரசிகர்கள் இல்லாதது எங்களுக்குப் பழக்கமானதல்ல. ஆனால் மைதானத்தில் சிலபல சப்தங்களை கொண்டு வந்ததில் ஐபிஎல் பிரமாதமாக யோசித்தது.

பனிப்பொழிவுக்குப் பிறகு பிட்ச் நன்றாக இருந்தது. பெரிய மைதானங்களில் நாங்கள் விளையாடியதில்லை என்பதில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்