அந்த 6 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது! உண்மையை ஒப்புக்கொண்ட டோனி

Report Print Basu in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுய தனிமையில் தங்கியிருந்தது எப்படி இருந்தது குறித்து டோனி வெளிப்படையாக கூறியுள்ளார்.

நெறிமுறைகளின்படி, அனைத்து அணிகளும் துபாயில் ஆறு நாட்களும், அபுதாபியில் 14 நாட்களும் தனிமைப்படுத்த வேண்டியிருந்தது.

ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்த பின்னர் சென்னை அணியில் தீபக் சாஹர் மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஐபிஎல் 2020 தொடரில் சென்னை வினையாட முடியுமா என்ற கேள்விகள் கூட எழுந்தது.

எனினும், அனைத்து தடைகளையும் முறியடித்து ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியில் மும்பைக்கு எதிராக களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இது சிஎஸ்கே கேப்டனாக டோனிக்கு கிடைத்த 100வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையுடனான போட்டிக்கு முன் பேசிய டோனி, குடும்பத்துடன் ஐந்து மாதங்கள் கழித்த பின்னர் சுய தனிமைப்படுத்தலின் போது முதல் ஆறு மிகவும் கடினமாக இருந்தது.

ஒவ்வொரு நபரும் அந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்தியதாக உணர்ந்தார்கள், யாரும் ஏமாற்றமடையவில்லை அல்லது விரக்தியடையவில்லை என்று டாஸ் வென்ற பிறகு டோனி கூறினார்.

14 நாட்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தலிருந்த வெளியேறியது மகிழ்ச்சியாக இருந்தது. பயிற்சி வசதிகள் மிகவும் நன்றாக இருந்தன என கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்