சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சில போட்டிகளில் விளையாடமாட்டார்! வெளியான அதிகாரப்பூர்வ தகவல்: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Report Print Basu in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் பிராவோ மேலும் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

முடிவடைந்த கரீபியன் பிரீமியர் லீக்கின் (சிபிஎல்) போது பிராவோவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது, இதன் காரணமாக சிபிஎல் இறுதிப் போட்டியில் அவர் பந்து வீசவில்லை.

இந்நிலையில், ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டுவைன் பிராவோவுக்கு பதிலாக விளையாடிய ஆல்ரவுண்டர் சாம் குர்ரான் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பட்டையை கிளப்பி சிஎஸ்கே வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

மும்பை அணியுடனான போட்டிக்கு பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், முழங்கால் காயத்திலிருந்து மீண்டு வரும் பிராவோ எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாமாட்டார் என அறிவித்தார்.

மேலும், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குர்ரானின் செயல்திறன் அற்புதமானது என்று ஃப்ளெமிங் கூறினார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சன்ற அம்பதி ராயுடுவின் பேட்டிங்கையும் ஃப்ளெமிங் பாராட்டினார்.

பிராவோவின் அதிரடியை காண ஆவலுடன் இருந்த ரசிகர்ளுக்கு ஃப்ளெமிங்கின் அறிவிப்பு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்