20 கோடி பேர்! உலக வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை-மும்பை மோதிய போட்டி

Report Print Basu in கிரிக்கெட்

சென்னை - மும்பை மோதிய முதல் ஐபிஎல் 2020 போட்டியை 20 கோடி பேர் டிவி, ஆன்லைனில் பார்த்து ரசித்துள்ளனர் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் உலக வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக, ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடப்படுகிறது.

இந்நிலையில், Dream11IPL தொடரின் முதல் போட்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது! BARC-ன் படி, இதுரை இல்லாத வகையில் 20 கோடி மக்கள் போட்டியைக் காண்டு ரசித்துள்ளனர்.

எந்தவொரு நாட்டிலும் எந்த விளையாட்டு லீக்கிற்கும் பதிவாகாத மிக உயர்ந்த தொடக்க நாள் பார்வையாளர்கள் இதுவாகும், எந்தவொரு லீக்கின் முதல் போட்டியையும் இதுவரை இத்தனை கோடி பேர் பார்த்ததே இல்லை என பிசிசிஐ செயலாளர் ட்வீட்டரில் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்