உலகின் ஒட்டு மொத்த கிரிக்கெட் வீரர்களையும் மீரள வைத்த பஞ்சாப் வீரர்! ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

Report Print Santhan in கிரிக்கெட்
740Shares

ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணி வீரர் நிகோலஸ் பூரான் செய்த பீல்டிங் ஒட்டு மொத்த கிரிக்கெட் வீரர்களையும் மிரள வைத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 223 ஓட்டங்களை, ராஜஸ்தான் 19.3 பந்தில் 226 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணி வீரரான பூரான் பிடித்த கேட்ச் ஒட்டு மொத்த கிரிக்கெட் வீரர்களையும் வாவ் என்று சொல்ல வைத்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கின் போது, முருகன் அஷ்வின் வீசிய 8-வது ஓவரின் 3வது பந்தை சஞ்சு சாம்சன், மிட் விக்கெட் திசையில் தூக்கியடிக்க, கிட்டத்தட்ட சிக்ஸருக்கே சென்றுவிட்ட அந்த பந்தை பவுண்டரி லைனுக்குள் டைவ் அடித்து பிடித்து, கீழே விழுவதற்கு முந்தைய நொடி, பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே வீசினார் நிகோலஸ் பூரான்.

இதைக் கண்ட சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பீல்டரும் பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜாண்டி ரோட்ஸே வியந்துபோய், எழுந்து நின்று கைதட்டினார்.

அதுமட்டுமின்றி கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படும், சச்சின் டெண்டுல்கரே, தனது கிரிக்கெட் கெரியரில் இப்படியொரு ஃபீல்டிங்கை பார்த்ததில்லை என்று பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்