கையில் கிடைத்த ரன் அவுட்டை கோட்டை விட்ட டெல்லி வீரர்கள்! அதிர்ஷ்டத்தால் தப்பிய இஷான் கிஷன் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
136Shares

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் அதிர்ஷ்டத்தின் மூலம் ரன் அவுட்டில் இருந்து தப்பிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ரோகித் தலைமையிலான மும்பை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலையிலான டெல்லி அணியும் மோதின.

இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 163 ஓட்டங்கள் குவித்த நிலையில், அதன் பின் ஆடிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.

இந்நிலையில் இப்போட்டியில் மும்பை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 10.2-வது பந்தை வேகப்பந்து வீச்சாளர ரபாடா வீசினார்.

அதை எதிர் கொண்ட சூர்யகுமார் யாதவ் ஆப் திசையில் அடித்து விட்டு ஓட முற்பட, ஆனால் அங்கிருந்த பீல்டர் ராஹனே அற்புதமாக பீல்டிங் செய்துவிட்டதால் சூர்யகுமார் யாதவ் உடனடியாக ஓட்டம் ஓடாமல் நின்றுவிட்டார்.

ஆனால், எதிர்புறம் இருந்த இஷான் கிஷான் மின்னல் வேகத்தில் சூர்யகுமார் யாத்வ் கிரிஷிற்கு வந்துவிட்டார். ஆனால் இதை ரஹானே கவனிக்காமல் சூர்யாகுமார் பக்கம் இருந்த ஸ்டம்பில் ரன் அவுட் முயற்சி செய்ய, இஷான் இந்த அவுட்டில் இருந்து தப்பினார்.

சற்று ராகேனே யோசித்து த்ரோ அடித்திருந்தால் இஷான் கிஷானை ரன் அவுட் ஆக்கியிருக்கலாம், போட்டியின் முடிவுகளும் மாறியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்