பிரபல கிரிக்கெட் வீரரை அணுகி சூதாட்டத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறிய தரகர்!

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் அதை முழுவதுமாக தடுக்க முடியாத நிலையே உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியது அம்பலமாகியுள்ளது.

தேசிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் வீரரை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகி சூதாட்டத்தில் ஈடுபட ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்த வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு இயக்குனர் ஆசிப் முகமதுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்