கோஹ்லியின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கெய்ல்! வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய காட்சி

Report Print Santhan in கிரிக்கெட்

பெங்களூரு அணியின் தலைவர் கோஹ்லியின் திட்டத்தை தூள் தூளாக்கிய பஞ்சாப் வீரர் கெய்ல், சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுலின் பஞ்சாப் அணியும் மோதின.

இதில் முதலில் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 171 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 177 ஓட்டங்கள் எட்டி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணியில் களம் கண்ட அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 45 பந்தில் 53 ஓட்டங்கள் குவித்தார். நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கிய கெய்ல் ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதல் 15 பந்துகளில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் தான் தன்னுடைய ருத்ரதாண்டவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டியில் கெய்லுக்காகவே வாஷிங்டன் சுந்தரை முதலில் 2 ஓவர்களை வீசவிட்டு கோஹ்லி நிறுத்தி வந்தார். முதல் இரண்டு ஓவருக்கு 8 ஓட்டங்கள் மட்டுமே வாஷிங்டன் சுந்தர் கொடுத்திருந்த நிலையில், கெய்லின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக 9-வது ஓவரில் அவருக்கு 3-வது ஓவரை கோஹ்லி கொடுத்தார்.

ஆனால், கோஹ்லியின் திட்டத்தை தவிடுபோடியாக்கிய கெய்ல், அவரின் ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். சுந்தர் ஓவரை கெய்ல் வெளுத்து வாங்கியதால், கோஹ்லி உடனே அவரின் ஓவரை நிறுத்திவிட்டார்.

தொடர்ந்து கொடுத்திருந்தால், கெய்ல் திணறியிருந்திருக்கலாம், ஆனால் கெய்ல் நன்றாக நிலைத்து ஆடிய பின், 17-வது ஓவரை வாஷிங்டன் சுந்தருக்கே கொடுத்தார்.

இதனால் கெய்ல் அந்த ஓவரையும் வெளுத்து வாங்க, முதல் 2 ஓவருக்கு 8 ஓட்டங்கள் கொடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர், இறுதியாக 4 ஓவர் முடிவில் 38 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்