கேப்டன் பதவியை விட்டு விலகினார் தமிழன் தினேஷ் கார்த்திக்! கொல்கத்தா அணியின் கேப்டன் இனி இவர் தான்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து வந்த தினேஷ் கார்த்திக் தன்னுடைய கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணி வீரருமான தினேஷ் கார்த்திக் இருந்து வருகிறார்.

இவர் தலைமையிலான கொல்கத்தா அணி நடைபெற்று முடிந்த 7 போட்டிகளில், 4-ல் வெற்றி 3-ல் தோல்வி என புள்ளிப்பட்டியலில், நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த தொடரின் தோற்க வேண்டிய போட்டிகளில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக் மற்றும் அந்தணியில் இருக்கும் இயான் மோர்கனின் நட்பு தான் என கூறப்பட்டது.

ஏனெனில் இருவருமே கலந்துரையாடி அணிக்கு தேவையானதை கொடுத்து வருவதாக கூறப்பட்டாலும், ஒரு சில போட்டிகளின் இறுதிக் கட்டத்தில் மோர்கனே ஒரு கேப்டன் போன்று செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது தினேஷ் கார்த்திக் தன்னுடைய கேப்டன் பதவியை மோர்கனுக்கு விட்டுக் கொடுத்துள்ளார். இதனால் அடுத்து வரும் போட்டிகளில் மோர்கனே கொல்கத்தா அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்