இலங்கை பிரிமியர் லீக் போட்டி அடுத்த மாதம் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

இலங்கை பிரிமியர் லீக் போட்டித் தொடர் நவம்பர் 21 முதல் டிசம்பர் 13 வரை கண்டி பல்லேகெல மற்றும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த போட்டித் தொடரின் கீழ் 23 இருபதுக்கு 20 ஓவர் போட்டிகள் இடம்பெறும். அத்துடன் போட்டிகளுக்காக போட்டியாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் அக்டோபர் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இப்போட்டிக்காக கொழும்பு, தம்புள்ளை, கண்டி, காலி மற்றும் யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து 5 அணிகள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன் 15 நாட்களுக்குள் 23 போட்டிகள் இந்த அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளன.

இலங்கையிலுள்ள வீரர்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு வீரர்களும் 75 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த போட்டித் தொடர் குறித்து கருத்து தெரிவித்த IPG நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில், “இருபத்துக்கு 20 கிரிக்கெட் களியாட்டத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு இலங்கை பிரிமியர் லீக் போட்டித் தொடரின் கீழ் எம்மால் முடிந்தது.

இலங்கை விளையாட்டுக்களில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிரபலமானது என்பதால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து இந்த இலங்கை பிரிமியர் லீக் போட்டித் தொடரை நடத்தக் கிடைக்கின்றமை குறித்து IPG நிறுவனம் என்ற ரீதியில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆரம்பத்திலிருந்தே ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இந்த போட்டித் தொடரை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக அவர்களது பூரண ஒத்துழைப்பை எமக்கு பெற்றுத் தருவார்கள் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.” என தெரிவித்தார்.

மேலும் “இந்த போட்டித் தொடரில் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் விளையாடக் கிடைப்பதன் மூலம் உள்நாட்டு வீரர்கள் தமது திறமைகளை மேம்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிட்டுவது மட்டுமன்றி நீண்ட காலத்திற்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறந்த போட்டித் தொடரை கண்டுகழிப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டும் என இலங்கை பிரிமியர் லீக் ஊடாக கிடைக்கும்.” என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதித் தலைவர் ரவீன் விக்ரம ரத்ன தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்