பவுண்டரி லைனில் அந்தரத்தில் பறந்து சூப்பர் கேட்ச்! களமிறங்கிய முதல் போட்டியிலே ஸ்மித்தை மிரள வைத்த இளம் இந்திய வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் 2020 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியில் அறிமுகமான ஷாபாஸ் அகமது பவுண்டரி லைனில் அசத்தல் கேட்ச் பிடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

துபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

முதல் இன்னிங்ஸின் 19வது ஓவரை ராஜஸ்தான் வீரர் கிறிஸ் மோரிஸ் பந்து வீசினார்.

19வது ஓவரின் 2 பந்தை மோரிஸ் வீச பேட்டிங் செய்த ஸ்மித் பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.

பவுண்டரி லைனில் பீலட்டிங் செய்துக்கொண்டிருந்த அறிமுக வீரர் ஷாபாஸ் அகமது அந்தரத்தில் பறந்த அசத்தலாக பந்தை கேட்ச் பிடித்தார். இதை கண்டு பேட்ஸ்மேன் ஸ்மித் உட்பட அனைவரும் மிரண்டனர்.

வங்காளத்தைச் சேர்ந்த ஷாபாஸ் அறிமுகமான முதல் போட்டியிலே தனது பீல்டிங் திறமையை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்