கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்! பிரபல முன்னணி கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமா் குல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் அவருடைய 17 ஆண்டுகால சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

36 வயதான உமா் குல் பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 163 விக்கெட்டுகளையும், 130 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி 179 விக்கெட்டுகளையும், 60 டி20 ஆட்டங்களில் விளையாடி 85 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ஓய்வு அறிவிப்பில், நீண்ட யோசனைக்குப் பிறகு நன்றாக சிந்தித்து கனத்த இதயத்துடன் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறேன்.

கிரிக்கெட் நான் எப்போதுமே நேசிக்கும் ஒரு விஷயம். இப்போது அவையனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறது என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்