வாழ்வா? சாவா? போட்டியில் திணறி வரும் சென்னை! ராஜஸ்தான் மிரட்டல் பவுலிங்

Report Print Santhan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணிக்கெதிரான இன்றைய வாழ்வா, சாவா போட்டியில் சென்னை அணி திணறி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனியின் சென்னை அணியும், ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டி இரண்டு அணிக்குமே முக்கியமான போட்டி, இரண்டு அணிகளுமே 9 போட்டிகளில் 3 வெற்றியுடன் உள்ளதால், போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. சென்னை அணிக்கு துவக்க வீரர்களாக சாம் கரண் மற்றும் டூபிளிசிஸ் களமிறங்கினர்.

ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூபிளிசிஸ் 10 ஓட்டங்களில் ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் வெளியேறியதை தொடர்ந்து வாட்சனும், 3 பந்துகளில் 8 ஓட்டங்கள், மற்றொரு துவக்க வீரரான சாம்கரன் 25 பந்துகளில் 22 ஓட்டங்கள் என வெளியேற, அம்பத்தி ராயுடுவுடன், டோனி ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சென்னை அணியை சரிவில் இருந்து மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ராயுடு 19 பந்தில் 13 ஓட்டங்களில் வெளியேற, டோனி மற்றும் ஜடேஜா ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

சற்று முன் வரை சென்னை அணி 13 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 71 ஓட்டங்கள் எடுத்து திணறி வருகிறது. ராஜஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்