CSK-யில் ஏன் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை? தோல்வி குறித்து டோனி விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்று அந்தணியின் தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்மித தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதின.

நேற்றைய போட்டி இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா? என்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 125 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின் ஆடிய ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 126 ஓட்டங்களை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

இதையடுத்து இந்த தோல்வி குறித்து, டோனி கூறுகையில், அணியில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துவது நல்லதல்ல. அது வீரர்களிடையே ஒருவித பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும்.

அந்த உணர்வு வீரர்களின் அறையில் இருக்கக் கூடாது. உண்மையை சொல்வதென்றால் இந்தாண்டு எங்களுக்கு சரியானதாக அமையவில்லை

அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. இதன் காரணமாகவே அவர்களை களமிறக்கவில்லை.

ஆனால் இனி வரும் ஆட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் களமிறக்கப்படுவார்கள். இனி வரும் போட்டிகளில் அவர்கள் அழுத்தம் இல்லாமல் விளையாடலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் சென்னை அணியில் கேதர் ஜாதவ் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, கேதர் ஜாதவ்வை உட்கார வைக்கலாம் என்று கூறி வந்தனர்.

அது குறித்த கேள்விக்கு, விடையளிக்கும் விதமாகவே டோனி இளைஞர்களிடம் உத்வேகம் இல்லை, அதனால் வாய்ப்பளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்