லங்கா பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) கண்டி டஸ்கெர்ஸ் அணியின் உரிமையை பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கானின் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.
லங்கான் பிரீமியர் லீக் டி20 தொடர் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கண்டி டஸ்கெர்ஸ் அணியில் சோஹைல் கான் இன்டர்நேஷனல் எல்எல்பி நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
சோஹைல் கான் இன்டர்நேஷனல் எல்எல்பி கூட்டமைப்பில் சல்மான் கானின் இளைய சகோதரர் சோஹைல் மற்றும் தந்தை, பிரபல திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் ஆகியோர் பகுதியாக உள்ளனர்.
கண்டி அணியில் அதிரடி மன்னன் கெய்ல், குசல் பெரேரா, லியாம் பிளங்கெட், வஹாப் ரியாஸ், குசால் மெண்டிஸ் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞர்கள் மற்றும் அனுபவமிக்க வீரர்கள் என கண்டி அணி திறனில் சமநிலையில் உள்ளது என சல்மான் கானின் இளைய சகோதரர் சோஹைல் கூறினார்.