பானங்களை தூக்கி கொண்டு மைதானத்தில் ஓடியதை பார்க்க வேதனையாக இருந்தது! CSK நட்சத்திர வீரர் உருக்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
1032Shares

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் டு பிளெசிஸ் ஐபிஎல் போட்டியில் பானங்களை தூக்கிக்கொண்டு ஓடியதை பார்த்து வேதனையாக இருந்தது என சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.

இதனிடையே தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் நடப்பு ஐபிஎல் சீஸனில் ஒரு ஆட்டத்தில்கூட விளையாடாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராக ஜொலித்தவர். நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு அணியிலும் இடம்பெற வேண்டுமென்ற விதி, தாஹிர் விளையாடாமல் இருப்பதற்கு முதல் காரணமாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தனது யூடியூப் நிகழ்ச்சிக்காக இம்ரான் தாஹீரை நேர்காணல் செய்தார். அப்போது பேசிய இம்ரான் தாஹீர் “சிஎஸ்கே ஒரு மிகச்சிறந்த அணி. நான் உலகம் முழுவதும் இருந்தேன். ஒரு உரிமையாளரிடமிருந்து இவ்வளவு மரியாதை நான் பார்த்ததில்லை. என் குடும்பத்தை வேறு யாரும் நன்றாக கவனிப்பதை நான் பார்த்ததில்லை.

நான் எப்போது விளையாடுவேன் என்பது குறித்து எனக்கு தெரியாது.

முந்தையை நாட்களில் ஒரு ஐபிஎல் சீசன் முழுவதும் டு பிளெசிஸ் பானங்களை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். அதை பார்க்கும்போது வேதனையாக இருந்தது. டி20 போட்டிகளில் அவருக்கு நல்ல ஸ்கோர் சராசரி இருந்தது.

அதேபோல் இந்த ஆண்டு நான் அப்படி இருக்கிறேன். அவர் எப்படி உணர்ந்திருப்பார் என்பது குறித்து என்னால் உணர முடிகிறது. நான் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். சிஎஸ்கே அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்கும்போது ஐந்தாவது நபருக்கு இடம் கிடைப்பது கடினம். எனக்கு கேம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்