முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வுக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி

Report Print Santhan in கிரிக்கெட்
4608Shares

இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில்தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில், 1983-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில், இந்தியாவுக்கு முதன் முறையாக உலககோப்பையை வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்தவர் கபில்தேவ்.

ஆல்ரவுண்டரான இவர், பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணிக்கு விளையாடு வரும் சிலர் வீரர்களான பாண்ட்யா போன்றோரை அடுத்த கபில் தேவ் என்று வர்ணிக்கின்றனர்.

அந்தளவிற்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றவர்.

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்