கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

61 வயதான முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் டெல்லி மருத்துவமனையில் நள்ளிரவுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஆஞ்சியோபிளாஸ்டிக்கு சகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டிக்குப் பிறகு கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது, அவர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும், அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1983 உலகக் கோப்பை வெற்றிக்கு இந்தியாவுக்குத் தலைமை தாங்கியவர் கபில் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா சூறாவளி என்று புனைப்பெயர் கொண்ட தேவ், 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு முன்பு 131 டெஸ்ட் போட்டிகளிலும், 225 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்