டோனி, ரெய்னாவை எடுக்க துடிக்கும் அணிகள்! சத்தமில்லாமல் நடக்கும் பேச்சுவார்த்தை: வெளியான தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்
1506Shares

அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஸ் தொடரில் டோனி, ரெய்னா மற்றும் யுவராஜ்சிங் ஆகியோரை விளையாட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போன்றே அவுஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

அதன் படி இந்தாண்டு நடைபெறவுள்ள பிக்பாஸ் லீக் தொடர் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

போட்டியை சுவாரஸ்யப்படுத்துவதற்காக, இந்த முறை பிக்பாஸ் லீக் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியிலும் விளையாடும் 11 பேர் 3 வெளிநாட்டு வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதனால், இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் டோனி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரை பிக் பாஷ் லீக்கில் விளையாட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டோனி, ரெய்னா இருவரும் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இந்த முறை ரெய்னா விளையாடாவிட்டாலும், அடுத்த முறை நிச்சயம் ரெய்னாவை ஐபிஎல்லில் ஏதாவது ஒரு அணியில் காணலாம் என்பதால், இவர்களுக்கு பிசிசிஐ அனுமதி கொடுக்குமா என்பது கேள்விகுறி, அதே சமயம் யுவராஜிற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, இதனால் அவர் நிச்சயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

டோனி, ரெய்னாவை பிக்பாஸ் லீக் தொடரில் கொண்டு வர முயற்சி நடப்பதாக செய்தி வெளியானதால், இப்போது பிக்பாஸ் லீக் தொடரில் விளையாடு அணியினர் தங்கள் பக்கம் எடுக்க போட்டி போட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்