டி காக், கிஷன் மிரட்டல்... சென்னை அணியை மொத்தமாக முடித்த மும்பை இந்தியன்ஸ்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
203Shares

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டி காக், கிஷன் அதிரடி காட்ட மும்பை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 41-வது ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் சார்ஜாவில் இன்று மோதியது.

நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணித்தலைவர் போலார்ட் முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தார்.

மும்பை அணித் தலைவர் ரோஹித் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக இன்று விளையாடததை அடுத்து போலார்ட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்களாக ருத்துராஜ், டூ பிளஸிஸ் ஜோடி முதல்முறையாக களமிறங்கியது.

முதல் ஓவரிலேயே போல்ட் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாது ருத்துராஜ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

இரண்டாவது ஓவர் வீசிய பும்ரா, சென்னை அணியின் ராயுடு (2) மற்றும் ஜெகதீசனை (0) அடுத்தடுத்து வெளியேற்றி சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

போல்ட் வீசிய 3வது ஓவரிலேயே பிளஸீஸை (1) அவுட்டாகினார். அடுத்து களமிறங்கிய டோனி (16) மற்றும் ஜடேஜா (7) சற்று பொறுமையாக ஆடினாலும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

பின் களமிறங்கிய தீபக் (0) மற்றும் தாகூர் (11) விரைவில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்கள். இறுதி கட்டத்தில் சாம் கர்ரனுடன் தாஹிர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அரைசதம் அடித்த சாம் 52 ஓட்டங்களுக்கு கடைசி பந்தில் போல்டானார். தாஹிர் 13 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணியில் அதிகபட்சமாக போல்ட் (4), பும்ரா (2) மற்றும் ராகுல் (2) விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து 115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலங்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சென்னை அணி வீசிய பந்தை நாலாப்புறமும் சிதறடித்தனர். அவர்கள் இருவருமே விக்கெட் இழப்பின்றி 12.2 ஓவர்களில் மும்பை அணியை மிக எளிதாக வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்தார். மறுபுறம், டி காக் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 46 ஓட்டங்களைக் குவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்