தோல்வி வலிக்கிறது! ஓடி ஒளிய முடியாது.. படுமோசமாக விளையாடிய CSK ஆட்டம் குறித்து பேசிய கேப்டன் டோனி

Report Print Raju Raju in கிரிக்கெட்
478Shares

இந்த ஐபிஎல் சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் சென்னை அணி படுமோசமாக விளையாடி வருவது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.

பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் படுதோல்வியடைந்தது சென்னை அணி.

தோல்விக்கு பின்னர் பேசிய டோனி, இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை.

பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம்.

கிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை.

நிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அணித்தலைவர் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்