CSK அணியிடம் இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்? வயசானவங்க என முன்னாள் வீரர் கோபம்

Report Print Santhan in கிரிக்கெட்
337Shares

சென்னை அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், சென்னை அணிக்காக விளையாடியவருமான ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பாக விளையாடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த வருட தொடரில் மிக மிக மோசமாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 8 போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கான ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் அணியாக வெளியேறியுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணம் என்ன என்பது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், இதை சொல்ல கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இருப்பினும் சொல்லியாக வேண்டும். நடப்பு சீசனில் இருந்து தற்போதை நிலவரப்படி சென்னை அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளனர்.

இதனை கடந்த போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன வார்த்தைகளை வைத்தே சொல்லி விடலாம். அந்த அணியின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகவே அவர் சொல்லியிருந்தார்.

அதை தான் கடந்த மூன்றாண்டுகளாக எல்லோரும் சொல்லி வருகிறோம். வயதான அணி, ஒரு கட்டத்தில் வயோதிகத்தினால் அணி வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்த்தது தான். இந்த சீசனில் அந்த சிக்கலை சென்னை சந்தித்துள்ளது.

சீனியர் வீரர்களும், பார்ம் அவுட்டும் வீழ்ச்சிக்கு காரணம். டூப்லெஸி மற்றும் தீபக் சஹாரை தவிர மற்ற அனைவரும் சொதப்பி வருகின்றனர். அதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்