சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பச்சை ஜெர்சியுடன் களமிறங்கும் பெங்களூரு அணி! என்ன காரணம்?

Report Print Basu in கிரிக்கெட்

துபாயில் நாளை நடக்கும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

சென்னை-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 தொடரின் 44-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கிறது.

இப்போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி வழக்கமான தங்களின் சிவப்பு, கருப்பு நிற ஜெர்சிக்கு பதிலாக நாளை பச்சை நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர்.

‘சுற்றுச்சூழலைக் காப்போம்’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூரு அணி விளையாட உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு சீசனிலிருந்து இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை பெங்களூரு அணி செய்து வருகிறது.

ஏபி டிவில்லியர்ஸ் சனிக்கிழமை பெங்களூருவின் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்