எங்களுக்கு இன்னும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது! டோனி கூறிய கணக்கு: உச்சகட்ட மகிழ்ச்சியி CSK ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்
920Shares

சென்னை அணியின் தலைவரான டோனி, பிளே ஆப்பிற்கு இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதால ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தெரிவு செய்துள்ளது.

நாணயசுழற்சியின் போது பேசிய டோனி, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். அதற்குக் காரணம் இந்த ஆடுகளம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதை வைத்துதான் கூறுகிறேன். கூட்டி கழித்துப் பார்த்தால் (Mathematically) எங்களுக்கு இன்னும் பிளே ஆப்ஸ் வாய்ப்புள்ளது. இந்த சீசனை நாங்கள் எப்படி முடிக்கிறோம் என்பதை பற்றிதான் நீங்கள் நினைக்க வேண்டும்.

நாங்கள் நான்கு ஐந்து போட்டிகள் இருந்த போதிலும், நாங்கள் அந்த ஒரு போட்டியை மட்டுமே கணக்கில் எடுத்து விளயைாடுவோம்.

புள்ளிப்பட்டியல் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெற்றால் அது தானாகவே கவனித்துக்கொள்ளும். வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பார்க்கிறோம். இன்று சான்ட்னெர், மோனு குமார் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை ரசிகர்கள் பலரும் பிளே ஆப் முடிந்துவிட்டது என்று நினைத்த போது, டோனி இன்னும் எங்களுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதால், சென்னை ரசிகர்கள் பலரும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

டோனி கூறிய கணக்கு என்னவென்றால், 11 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. முதலில் சென்னை அணி எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

புள்ளிப்பட்டியிலில் முதல் 3 இடத்தில் இருக்கும் மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் சென்னை தவிர மற்ற அணிகளுடன் வெற்றி பெற வேண்டும்.

தற்போது புள்ளிப்பட்டியிலில் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்து வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறக் கூடாது.

கொல்கத்தா அணிக்கு மீதம் 3 போட்டிகள் உள்ளது. மேலும் பஞ்சாப் அணி மீதமுள்ள 3 போட்டிகளில் 1 போட்டிக்கு மேல் வெற்றி பெற கூடாது.

அதேப் போன்று சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளின் போட்டிகளும் முக்கியமானது. இந்த அணிகள் 2 வெற்றிக்கு மேல் பெற்றுவிட்டால் சென்னை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது.

சென்னை தற்போது -0.733 ரன்ரேட் உடன் உள்ளதால் அடுத்த 3 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியத்துவமான ஒன்றாகும்.

கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐ.பி.எல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடதக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்