பவுண்டரி லைனில் டு பிளிஸ்சிஸ்-கெய்க்வாட் இணைந்து பிடித்த பிரமிக்க வைக்கும் கேட்ச்: குவியும் பாராட்டு

Report Print Basu in கிரிக்கெட்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் டு பிளிஸ்சிஸ்-கெய்க்வாட் இணைந்து பிடித்த பிரமிக்க வைக்கும் கேட்ச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

துபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரில் 44 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கோஹ்லி 50 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் சென்னை வீரர் சாம் கர்ரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் சென்னை வீரர் மிட்செல் சான்ட்னெர் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தை பெங்களூர் வீரர் படிக்கல் பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.

எனினும், பவுண்டரியில் பீல்டிங் செய்துக்கொண்டிருந்த டு பிளிஸ்சிஸ் பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார், எனினும் கீழே விழுந்த டு பிளிஸ்சிஸ் பவுண்டரி லைன் அருகே தான் இருப்பதை அறிந்தவுடன் அருகிலிருந்த கெய்க்வாட்டை நோக்கி பந்தை வீசி அவர் அதை அருமையாக பிடித்தார்.

படிக்கலின் கேட்ச்சை இரண்டு வீரர்கள் இணைந்து அசத்தலாக பிடித்ததை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்