கோஹ்லி படையை காலி செய்த டோனி! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
346Shares

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, இதில் நாணய சுழற்சியில் வென்ற, பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதன் படி, தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 3.5 ஓவரில் 31 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, பிரிந்தது.

ஆரோன் பிஞ்ச் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தேவ்தத் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பெங்களூரு அணி 6.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லியுடன் டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நீண்ட நேரம் களத்தில் நின்றாலும் அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க இயலவில்லை. 17.3 ஓவரில் 128 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டிவில்லியர்ஸ் 36 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கோஹ்லி-டிவில்லியர்ஸ் ஜோடி 68 பந்தில் 82 ஓட்டங்கள் எடுத்தது. 19-வது ஓவரில் அரைசதம் அடித்த விராட் கோஹ்லி அந்த ஓவரின் கடைசி பந்தில் 43 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

கடைசி ஓவரில் தீபக் சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தி 7 ஓட்டங்கள் விட்டு கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடகத்தில் இருந்தே அதிரடியாக விளையாடத் தொடங்கினர்.

சென்னை அணி 5.1 ஓவரில் 46 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது டு பிளிஸ்சிஸ் 13 பந்தில் தலா இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

அடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. அம்பதி ராயுடு 27 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்மிழந்தார். அடுத்து டோனி களம் இறங்கினார்.

ருத்துராஜ் கெய்க்வாட் 42 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி அணியை 18.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ருத்துராஜ் கெய்க்வாட் 51 பந்தில் 65 ஓட்டங்களும், டோனி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த தோல்வியால் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும் வாய்ப்பு தள்ளிப் போகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்