தந்தை உயிரிழந்த சோகத்திலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் வீரர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடி தந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ் மந்தீப் சிங். இவரது தந்தை சர்தார் ஹர்தேவ் சிங்உடல்நலக் குறைவு காரணமாக 3 நாட்களுக்கு காலமானார். இந்த செய்தி அறிந்தும் இந்தியா திரும்பால் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார் மந்தீப் சிங்.
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக மந்தீப் சிங் 56 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். மந்தீப் சிங் மற்றும் கெயில் இருவரின் அதிரடியான ஆட்டத்தால் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தப் போட்டிக்கு பின் அவர் பேசுகையில், இன்றைய ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் இருக்க வேண்டும் என்பதை தான் என் தந்தை அடிக்கடி சொல்வார்.
நான் சதம் அல்லது இரட்டை சதம் அடித்தால் கூட ஏன் அவுட்டனாய் என்று தான் கேட்பார் என்று தனது தந்தை குறித்து உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.