முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவர் வரை காட்டடி! மிரண்டு போன டெல்லி: ஹதராபாத் அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
302274Shares

டெல்லி அணிக்கெதிரான போட்டியில், ஹைதராபாத் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் வாரனரின் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யரின் டெல்லி அணியும் மோதின.

அதன் படி நாணயசுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக இந்த முறை விருத்திமான் சாஹா-வார்னர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் எகிறியது.

ஹைதராபாத் அணி 5 ஓவரில் 55 ஓட்டங்களை குவித்தது. ரபடா வீசிய 6-வது ஓவரில் வார்னர் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ஓட்டங்கள் விளாசினார். இதனால் பவர் பிளேயில் டெல்லி அணி 77 ஓட்டங்கள் குவித்தது. வார்னர் 25 பந்தில் அரைசதம் அடித்தார்.

இருவரையும் எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் டெல்லி பந்து வீச்சாளர்கள் திணறி போனார். யார் ஓவராக இருந்தாலும், காட்டடி தான் என்பது போல் அடித்தனர்.

இதனால், 8.4 ஓவரிலே ஹைதராபாத் அணி 100 ஓட்டங்களை தொட்டது. அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் வார்னர் 66(34) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மணிஷ் பாண்டேவும், சஹாவுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சஹா 27 பந்தில் சதமடிக்க, ஹைதராபாத் அணி 12.5 ஓவரில் 150 ஓட்டங்களை கடந்தது.

அதன் பின் ஆட்டத்தின், 15-வது ஓவரை நோர்ட்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் 87 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாஹா ஆட்டமிழந்தார்.

ஆனால், அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, 17.3 ஓவரிலே ஹைதராபாத் அணி 200 ஓட்டங்களை தொட்டது,

இறுதியாக 20 ஓவர் முடிவி ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்தது. ஹைதராபாத் அணி வீரரான மணிஷ் பாண்டே 31 பந்தில் 44 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரரான தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். ரகானே 26 ஓட்டங்கள், ஹெட்மயர் 16 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேற, அந்த அணியின் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் மட்டும் 36 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 131 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் அணி சார்பில் ரஷீத் கான் சிறப்பாக பந்து வீசி 7 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சந்தீப் சர்மா, நடராஜனாகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்