ஐபிஎல்லில் கலக்கி வரும் தமிழனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நன்றி என உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்
964Shares

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தேர்வு குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்காக சிறப்பான பங்களிப்பை தந்து வருகிறார் தமிழக வீரர் வருண்சக்ரவர்த்தி.

இதன் பயனாக அவருக்கு அவுஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து வருண்சக்ரவர்த்தி கூறுகையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் நேற்று முடிந்தபின் என்னிடம் வந்து சகவீரர்கள் உனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதிலும், குறிப்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் உன்னை தெரிவு செய்துள்ளார் என்று கூறினர். இதைக் கேட்டவுடன் ஏதோ கனவில் இருப்பது போன்று இருந்தது.

நான் மீண்டும்...மீண்டும் இந்திய அணியில் இடமா, எனக்கு இந்திய அணியில் இடமா என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய அடிப்படைக் குறிக்கோள் எந்த அணியில் இடம் பெற்றாலும் சிறப்பாக விளையாடுவது அணியின் வெற்றிக்காகத் தொடர்ந்து பங்களிப்புச் செய்வதாகும்.

இதே பணியை இந்திய அணிக்கும் நான் செய்வேன் என நம்புகிறேன். சமூக ஊடகங்களை நான் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. என்னைத் தெரிவு செய்த தேர்வாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன், வேறு வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்