உங்கள் வேலையை பாருங்கள்! சீறிய டோனியின் ரசிகர்...அவருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
518Shares

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் ரசிகருக்கு வர்ணனையாளர் சைமன் டூல் பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மோசமாக விளையாடும் நிலையில் ரசிகர்களில் ஒரு பகுதியினர், வர்ணனையாளர்கள் முன்னாள் வீரர்கள் என்று டோனியின் கேள்விக்குரிய சில முடிவுகள் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில் வர்ணனையாளரும் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வலது கை வேகப்பந்து வீச்சாளருமான சைமன் டூல், டோனியின் கேப்டன்சி பற்றியும் சில முடிவுகள் பற்றியும் விமர்சித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் சைமன்டூலுக்கு மெசேஜ் செய்த அந்த ரசிகர், டியர் சைமன், டோனியை விமர்சிப்பதை நிறுத்துங்கள், உங்கள் வேலை என்னவோ அதைப் பாருங்கள், ஒரு மிகப்பெரிய வீரரை விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் ஒன்றும் பெரிதாக ஆடிவிடவில்லை. மரியாதையுடன் இந்த மாதிரி பழக்கவழக்கங்களைக் கைவிடுங்கள் என்று சாடியிருந்தார்.

உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று அவர் கூறியதையடுத்து பிரதிக் ராதி என்ற அந்த நெட்டிசனுக்கு பதிலளித்த சைமன் டூல், உண்மையில் மன்னிக்கவும் பிரதிக், ஆனால் ஒரு வர்ணனையாளரின் வேலை என்னவென்பது உங்களுக்கு தெரியவில்லை என்றால் நான் ஒன்று கூறுகிறேன், அது ஆட்டம் பற்றிய வர்ணனை விமர்சனம், அதை ஆடுபவர்கள் பற்றிய கருத்து ஆகியவையும் ஆகும் என பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்