முதல் விக்கெட்டும் கோஹ்லி! 100வது விக்கெட்டும் கோஹ்லி... ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த நட்சத்திர வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்
162Shares

ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மும்பை பந்துவீச்சாளர் பும்ரா புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். தொடரின் இன்றைய 48வது ஆட்டத்தில் பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா நான்கு ஓவர்களில் வெறும் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேவ்தத் படிக்கல்(74 ரன்கள்), விராட் கோஹ்லி(9 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே(2 ரன்கள்) ஆகிய மூவரும் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜஸ்ப்ரீத் பூம்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். பும்ராவின் முதல் ஐ.பி.எல். விக்கெட்டும் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்