அன்றே சரியாக கணித்த ரோகித்சர்மா! பெங்களூரை கதறவிட்ட சூர்யாகுமார் பற்றி 2011-ல் போட்ட பதிவ பாருங்க

Report Print Santhan in கிரிக்கெட்
335Shares

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் குறித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ரோஹித் பதிவிட்டிருந்த பதிவு, தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆனால், அவர் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் மூன்று வித தொடர்களில் ஏதேனும் ஒரு தொடரில் கூட, அவர் தெரிவு செய்யப்படவில்லை.

இதனால் தேர்வு குழுவை ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஆனா ரோகித் சர்மா, கடந்த 2011-ஆம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அதில், சூர்யகுமார் யாதவ், நிச்சயமாக பெரிய வீரராக வருவார் என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் ரோகித் அப்போதே சரியாக கணித்துள்ளார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்