ஐபிஎல்லில் அபார சதமடித்த நட்சத்திர வீரர்! இதை தான் நான் விரும்புவேன் என பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் பென் ஸ்டோக்ஸ் ஓபனிங் பேட்டிங்கை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவர் எப்போதுமே மிடில் ஆர்டர் வரிசையில்தான் களம் இறங்கி பேட்டிங் செய்வார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ராஜஸ்தான் அணியில் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். சில போட்டிகளில் சொதப்பியதால் விமர்சனத்திற்கு உள்ளானார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் எப்போதுமே தொடக்க வீரராக களம் இறங்க விரும்புவேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் இந்த இந்த புதிய ரோலை (ஓபனிங் பேட்டிங்) மகிழ்ச்சியாக செய்கிறேன். இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், டாம் பாண்டன், பேர்ஸ்டோவ், அலேக்ஸ் ஹேல்ஸ் இருப்பதால் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்குவது கடினம். இதனால் கிடைக்கும் வாய்ப்பை மகிழ்ச்சி அனுபவிக்கிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனக்கு பொறுப்ப கொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்