தன் ரசிகனின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா டோனி?

Report Print Kavitha in கிரிக்கெட்

சமீபத்தில் கிரிக்கெட் மற்றும் சினிமா மீது கொண்டுள்ள அதிக மோகத்தால் ரசிகர்கள் ஒருவர் தனது வீட்டையை ரூ.1½ லட்சம் செலவில் வர்ணம் பூசி, வீட்டின் முன்புறம் டோனி படமும், பக்கவாட்டில் சென்னை சூப்பர்கிங்ஸ் சிங்க படத்தையும் வரைந்து சமூக வலைத்தளம் மூலம் பிரபலமாகியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவரை தனது வீட்டை “ஹோம் ஆப் டோனி” என மாற்றியுள்ளார்.

இவர் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதால், டோனிக்கு புகழ்சேர்க்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து இப்படி வீட்டை மாற்றிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் பாராட்டிற்குரிய சம்பவமாக மாறியது.

இதனை பார்த்த டோனி ரசிகர் பலரும் கோபிகிருஷ்ணனை புகழ்ந்து வருகின்றனர்.

இது குறித்து இவர் என்ன கூறுகின்றார் என்பதை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவில் பார்ப்போம்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்