என்ன பந்துடா இது! பந்து வீச்சாளரை தமிழில் திட்டிய தினேஷ் கார்த்திக்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்
533Shares

கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், மும்பை அணிக்கெதிரான போட்டியில் பந்து வீச்சாளரை தமிழில் திட்டிய வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் நேற்றைய சென்னை அணிக்கெதிரான போட்டியில், கொல்கத்தா தோல்வியடைந்ததால், அந்தணியின் பிளே ஆப் வாய்ப்பு மங்கத் துவங்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகள் கட்டாய வெற்றி, அதுமட்டுமின்றி ஒரு சில அணிகளின் முடிவுகளால் மட்டுமே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இந்நிலையில், மும்பை அணிக்கெதிரான போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் பந்து வீச்சாளரை திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த போட்டியின் 14-வது ஓவரை வீசிய பந்து வீச்சாளரை தினேஷ் கார்த்திக் என்ன பந்து இது என்று தமிழில் திட்டுகிறார்.

அங்கிருந்த வீரர்கள் யாருக்கும் தமிழ் தெரியாது என்றாலும் அவர் கூறியது அப்படியே ஸ்டம்ப் கேமராவில் உடன் இணைக்கப்பட்டிருக்கும் மைக் மூலம் தெரிய வந்ததால் போட்டியை பார்த்து கொண்டிருந்த லட்சக்கணக்கான தமிழர்களுக்கு நன்றாக கேட்டது.

இந்த சீசன் முழுவதும் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தாத தினேஷ், பந்துவீச்சாளரை திட்டியது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்