கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை திடீரென்று மாற்றியது ஏன்? சந்தேகத்தை கிளப்பும் அகார்கர்

Report Print Santhan in கிரிக்கெட்
397Shares

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர், கொல்கத்தா அணியில் கேப்டனை திடீரென்று மாற்றியது ஏன், ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில், நூலிழையில் பிளே ஆப் வாய்ப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இழந்தது.

இதற்கு முக்கிய காரணம், அந்த அணியில் திடீரென்று கேப்டனை மாற்றியது தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் தொடரின் பாதியில் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக், தான் பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போவதாக கூறி, கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னரே இயான் மோர்கன் கொல்கத்தா அணியின் கேப்டன் ஆனார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகார்க்கர், கொல்கத்தா அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என நம்பினேன். அந்த அணியில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்.

அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது கேப்டனை மாற்றினார்கள். இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்கிறேன்.

அணிக்குள் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இதுபோல முந்தைய காலகட்டத்தில் நடந்திருக்கிறது. ஆனால், அவர்கள் பிளே ஆப் சுற்றுக்குள் சென்றார்கள். இப்போது, அப்படி நிகழவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்