இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

பிரபல திரைப்பட நடிகரான விஜயை சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் வருண்சக்ரவர்த்தி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், அது ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அருண் சக்ரவர்த்தி இடம் பெற்றிருந்தார்.

இவரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்ததுடன், முக்கியமான கட்டத்தில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

இதையடுத்து இவருக்கு அவுஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் காயம் காரணமாக அவரால் அந்த தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை.

இருப்பினும் வருண் சக்ரவர்த்தி பேட்டி ஒன்றில், நடிகர் விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும், முடிந்தால் நீங்கள் உதவுங்கள், இது தான் என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார்.

அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாக, தற்போது வருண் சக்ரவர்த்தி, நடிகர் விஜயை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட மற்றொரு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கனவு நிறைவேறியது என்று இவர்களின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், விஜயின் தீவிர ரசிகரான வருண் சக்ரவர்த்தி தனது இடது கையின் தோள் பட்டையில் விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா படத்தில் இருக்கும் ட்ரேட் மார்க் போசை தனது உடம்பில் டாட்டூ குத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்