இந்திய அணியில் இந்த 2 வீரர்களிடம் ஜாக்கிரதையாக இருப்போம்! அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
345Shares

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களிடம் ஜாக்கிரதையாக இருப்போம் என்று அவுஸ்திரேலியா அணி வீரர் அலெக்ஸ் கேர் கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறது.

கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இந்த தொடர் குறித்து கூறி வருகின்றனர்.

அந்த வகையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலியா அணியின் சீனியர் வீரரான அலெக்ஸ் கேரி, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களிடம் ஜாக்கிரதையாக இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பும்ராவும்,முகமது ஷமியும் எத்தனை முக்கியமான பவுலர்கள் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் எச்சரிக்கையாக இருப்போம்.

அதேவேளையில் எங்கள் அணியில் திறமையான துடுப்பாட்ட வீரர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. மேலும் டேவிட் வார்னர், பின்ச் ஆகியோர் ஏற்கெனவே இந்திய வேகப்பந்தை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்