360 டிகிரி டிவில்லியர்சுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்
364Shares

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி வீரரான 360 டிகிரி டிவில்லியர்சுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்சுக்கு டேனியலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியைக் கடந்த ஜூன் மாதம் அறிவித்த டிவிலியர்ஸ், தற்போது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகர்ந்துள்ளார்

இதைக் கண்ட டிவில்லியர்ஸ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

டிவிலியர்ஸ் கடந்த ஆண்டு மே 23-ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் மீண்டும் அவரை அணிக்குள் கொண்டு வந்து கோப்பை வெல்லத் தென்னாப்பிரிக்கா அணி நிர்வாகம் கடுமையாக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்